2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிற்றியை விட்டு விலகுகிறார் சில்வா

Editorial   / 2019 ஜூன் 26 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியை விட்டு 2019-2020 பருவகாலத்துடன் விலகவுள்ளதாக அக்கழகத்தின் மத்தியகளவீரரான டேவிட் சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவிலிருந்து 2010ஆம் ஆண்டு மன்செஸ்டர் சிற்றியில் இணைந்திருந்த 33 வயதான டேவிட் சில்வா, மன்செஸ்டர் சிற்றிக்காக 395 போட்டிகளில் இதுவரை விளையாடி, நான்கு பிறீமியர் லீக் பட்டங்களையும், இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத்தை இரண்டு தடவையும், இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத்தை இரண்டு தடவையும் மன்செஸ்டர் சிற்றியுடன் வென்றிருந்தார்.

தமது இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி தக்க வைத்த கடந்த பருவகாலத்தில், 33 பிறீமியர் லீக் போட்டிகளில் விளையாடி ஆறு கோல்களைப் பெற்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .