2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சீரி ஏ-இன் சிறந்த வீரராக புபான்

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரராக, ஜுவென்டஸ் அணியின் கோல் காப்பாளரான ஜல்லூயிஜி புபான் தெரிவாகியுள்ளார்.

அந்தவகையில், தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக ஜுவென்டஸ் அணியின் வீரரொருவர் சீரி ஏ தொடரின் சிறந்த வீரராகத் தெரிவாகியுள்ளார். 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக அன்ட்ரயா பியர்லோ தெரிவாகியதுடன், 2015ஆம் ஆண்டு கார்லோஸ் டெவேஸ் தெரிவாகியிருந்ததுடன் கடந்தாண்டு லியனார்டோ பொனுச்சி தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, குறித்த இத்தாலிய கால்பந்தாட்ட விருதுகள் வழங்கும் நிகழ்வில், சிறந்த பயிற்றுவிப்பாளராக நாப்போலியின் மெளரிசியோ சார்ரி தெரிவாகியிருந்தார். இவ்விருதுகளுக்கு வீரர்களே வாக்களித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .