Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணிக்கும் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் 21ஆவது நிமிடத்தில் செல்சியின் அன்டோனி ருடிகர் பெற்ற கோல் காரணமாக அவ்வணி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் 55, 73ஆவது நிமிடங்களில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அன்டோனி மார்ஷியல் பெற்ற கோல்களின் காரணமாக அவ்வணி முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும் போட்டியின் இறுதி நிமிடத்தில் செல்சியின் றொஸ் பார்க்லி பெற்ற கோலோடு போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
குறித்த போட்டியின் இறுதிக் கணத்தில் கோலைப் பெற்று போட்டியை சமநிலையில் செல்சி முடித்திருந்த நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோவின் முன்னால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் முழங்கையையும் செல்சியின் தொழில்நுட்ப உதவியாளர் மார்கோ லன்னி மடித்துக் காண்பிடித்திருந்த நிலையில், அவரை நோக்கி ஆவேசமாக சென்றிருந்த மொரின்யோ பணியாளர்களால் தடுக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்றிருந்த பேர்ண்லி அணியுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அகுரோ, பெர்ணார்டோ சில்வா, பெர்ணான்டின்ஹோ, றியாட் மஹ்ரேஸ், லெரோய் சனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஹட்டர்ஸ்பீல்ட் டெளண் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றிருந்தார்.
இந்நிலையில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி வென்றிருந்தது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை எரிக் லமேலா பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
3 hours ago