2025 ஜூன் 30, திங்கட்கிழமை

செளதாம்டனிடம் தோற்றது லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 05 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செளதாம்டனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோல்வியடைந்தது.

செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி இங்ஸ் பெற்றிருந்தார்.

இப்போட்டியின் முடிவிலும் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 33 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் 33 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும், கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. எனினும், லிவர்பூலை விட யுனைட்டெட் ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X