2025 ஜூலை 10, வியாழக்கிழமை

செவில்லாவை வென்று முதலிடத்தில் பார்சிலோனா

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற செவில்லாவுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற பார்சிலோனா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது.

பார்சிலோனா சார்பாக, பிலிப் கோச்சினியோ, லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ், இவான் றகிட்டிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, செவில்லா சார்பாக ஒரு கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டதோடு மற்றைய கோலை லூயிஸ் முரியேல் பெற்றிருந்தார்.

இந்நிலையில், குறித்த போட்டியில் தனது வலதுகை மோசமாகத் தாக்கமுறும் வகையில் வீழ்ந்த லியனல் மெஸ்ஸியின் கையில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மூன்று வாரமளவுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், அடுத்த வார நடுப்பகுதியில் இடம்பெறவுள்ள இன்டர் மிலனுக்கெதிரான சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டி, அடுத்த வாரயிறுதியில் இடம்பெறவுள்ள றியல் மட்ரிட்டுக்கெதிரான எல் கிளாசிகோ என அழைக்கப்படும் லா லிகா போட்டி உள்ளிட்டவற்றை மெஸ்ஸி தவறவிடுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .