Shanmugan Murugavel / 2015 நவம்பர் 10 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெர்மன் கால்பந்தாட்ட சங்கத் தலைவர் வோல்ஃப்காங் நியேர்ஸ்பச், தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பு (பீபா) கட்டணம் ஒன்றில் வரி ஏய்ப்பு செய்தமை தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இராஜினாமாச் செய்துள்ளார்.
பீபாவுக்கு மேற்கொண்ட 6.7 மில்லியன் யூரோ கட்டணத்துக்கு தான் பொறுப்பேற்பதாக கூறியே வோல்ஃப்காங் நியேர்ஸ்பச் இராஜினாமாச் செய்துள்ளார்.
இந்தப் பணத்தின் மூலமே, 2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் உலகக் கிண்ணத்தை நடாத்துவதற்காக, பீபாவின் அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டு, ஜெர்மனிக்கு வாக்களிபதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
தான், எப்போதும் நியாயமாகவும், நம்பிக்கையுடனும், சரியாகவுமே பணிபுரிந்ததாக நியேர்ஸ்பச் தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காக, கடந்த மூன்றாம் திகதி, பிராங்பேர்ட்டில் உள்ள பொலிஸார் ஜெர்மன் கால்பந்தாட்ட சங்க தலைமையத்தில் சோதனை நடாத்தியிருந்தனர். எனினும் ஜெர்மன் கால்பந்தாட்ட சங்கம், மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தது.
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago