2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜுவென்டஸுக்குத் திரும்புகின்றார் புபான்?

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான ஜல்லூயிஜி புபான், இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸுக்கு ஓராண்டு ஒப்பந்தமொன்றில் திரும்புவதற்கான மேம்பட்ட பேரம்பேசல்களில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

41 வயதான ஜல்லூயிஜி புபான், ஜுவென்டஸுடனான தனது ஒப்பந்தமானது கடந்தாண்டு ஜூலையில் முடிவடையும்போது ஜுவென்டஸை விட்டு விலகி பரிஸ் ஸா ஜெர்மைனில் ஓராண்டு ஒப்பந்தத்தில் இணைந்திருந்தார். ஜல்லூயிஜி புபானின் ஓராண்டு ஒப்பந்தத்தை நீடிக்கும் வாய்ப்பை பரிஸ் ஸா ஜெர்மைன் வழங்கியபோதும் அதை ஜல்லூயிஜி புபான் மறுத்திருத்தார்.

இந்நிலையில், வொச்சிங் ஸ்டான்ஸ்கி அடுத்ததாக இரண்டாவது தெரிவு கோல் காப்பாளராக ஜுவென்டஸில் இருப்பதற்கு ஜல்லூயிஜி புபான் இணங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அந்தவகையில், இதன் மூலம் 2020ஆம் ஆண்டில் ஜுவென்டஸின் பணிப்பாளராகவோ அல்லது ஜுவென்டஸின் முகாமையாளர் மெளரிசியோ சரியின் பயிற்சியாளர் குழாமிலேயே ஜல்லூயிஜி புபான் இணைந்து கொள்ளக்கூடிய நிலமை காணப்படுகின்றது.

17 ஆண்டுகளாக ஜுவென்டஸுக்காக 656 போட்டிகளில் ஜல்லூயிஜி புபான் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான பர்மா, அட்லாண்டா, போர்த்துக்கல் கழகமான எஃப்.சி போர்ட்டோவுடனும் ஜல்லூயிஜி புபான் இணைந்து கொள்வார் எனக் கூறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .