Editorial / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜூவென்டஸின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற ஜூவென்டஸ், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியவற்றுக்கிடையேயான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஜூவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கொன்ஸலோ ஹியூகைன் பெற்றிருந்தார். டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன், கிறிஸ்டியன் எரிக்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, சுவிற்ஸர்லாந்துக் கழகமான எப்.சி பேஸிலின் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, எப்.சி பேஸில் ஆகிய அணிகளுக்கிடையிலான இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, இல்கி குன்டோகன் இரண்டு கோல்களையும் பெர்னார்டோ சில்வா, சேர்ஜியோ அகுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago