Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற போட்டியொன்றில் ஜேர்மனியை நடப்பு உலக சம்பியன்கள் பிரான்ஸ் வென்றது.
பிரான்ஸில் இடம்பெற்ற குறித்த போட்டியில், ஜேர்மனியின் முன்கள வீரர் லெரோ சனேயின் உதையை பிரான்ஸின் பின்கள வீரர் பெர்சனல் கிம்பெப்பே கையால் தடுக்க ஜேர்மனிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. போட்டியின் 14ஆவது நிமிடத்தில் அப்பெனால்டியை டொனி க்றூஸ் கோலாக்க ஜேர்மனி ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது.
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், பிரான்ஸின் பெனால்டிப் பகுதிக்குள் வந்திருந்த பந்தொன்றை பிரான்ஸின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் பாய்ந்து தடுத்து, ஜேர்மனியின் முன்கள வீரர் திமோ வேர்ணரின் தொடுகைப் பரப்புக்கு அப்பால் அனுப்பியிருந்ததுடன், பின்னர் ஜேர்மனியின் பின்கள வீரர் மத்தியாஸ் ஜின்டரிடமிருந்து தாழ்வாக வந்த உதையையும் தடுத்திருந்தார்.
இந்நிலையில், சக வீரர் லூகாஸ் ஹெர்ணான்டஸிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய பிரான்ஸின் அன்டோனி கிறீஸ்மன் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதோடு, பின்னர் சக வீரர் பிளெய்ஸி மத்தியூடி விதிகளை மீறி கையாளப்பட வழங்கப்பட்ட பெனால்டியை 80ஆவது நிமிடத்தில் கோலாக்க இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.
அந்தவகையில், இத்தொடரில் தோற்கடிக்கப்பட முடியாதிருக்கின்ற அணியாக விளங்குகின்ற பிரான்ஸ், மூன்று போட்டிகளில் ஏழு புள்ளிகளுடன் குழு ஏ1இல் முதலிடத்தில் காணப்படுகின்றது.
இந்நிலையில், மறுபக்கமாக நடப்பாண்டில் முதற்தடவையாக ஆறு போட்டிகளில் ஜேர்மனி தோல்வியடைந்துள்ளதோடு, நெதர்லாந்துடனான போட்டியில் கடந்த சனிக்கிழமை 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததோடு, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
அந்தவகையில், உலகக் கிண்ணத்திலும் குழுநிலைப் போட்டிகளோடு ஜேர்மனி வெளியேறிய நிலையில், இத்தொடரில் லீக் பிக்கு தரமிறக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது. குறித்த ஏ1 குழுவில் நெதர்லாந்தை விட ஒரு போட்டி கூடுதலாக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஜேர்மனி ஒரு புள்ளியுடன் இறுதி இடத்தில் காணப்படுகின்றது. இது அவ்வணியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோ மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
59 minute ago
2 hours ago