Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான, சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், விம்பிள்டனுக்கு பின்னரான தனது முதலாவது போட்டியை, இவ்வாண்டு டிசெம்பரில் இடம்பெறவுள்ள உலக டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் விளையாடவுள்ளார்.
12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோக்கோவிச்சின் பருவகாலம் முழங்கை காயம் காரணமாக முன்னரே முடிவடைந்த நிலையிலேயே, இவ்வாண்டு டிசெம்பர் 28ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை அபுதாபியில் இடம்பெறவுள்ள குறித்த காட்சித் தொடரில் விளையாடவுள்ளார்.
இதேவேளை, குறித்த தொடரில், உலகின் தற்போதைய ஒன்பதாம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்காவும் மீள்வருகையை நிகழ்த்தவுள்ளார். முழங்காய் காயமொன்று காரணமாக, இவ்வாண்டு ஒகஸ்டில், தனது பருவகாலத்தை வவ்றிங்கா முடித்துக் கொண்டிருந்தார்.
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago