Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றுவதற்காகச் சேர்க்கப்பட்ட இரண்டு புதிய அணிகளுக்குமான முதற்கட்டத் தெரிவு, இன்று இடம்பெற்றது. இரண்டு அணிகளுக்குமே, தலா 5 வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இரு அணிகளுமே, 5 வீரர்களையும் தெரிவுசெய்தன.
புதிதாக உருவாக்கப்பட்ட பூனே, ராஜ்கொட் அணிகளே, இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளின் வீரர்களைத் தெரிவுசெய்தன.
இதன்படி, பூனே அணி சார்பாக மகேந்திரசிங் டோணி, அஜின்கியா ரஹானே, இரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்டீவன் ஸ்மித், பப் டு பிளெஸிஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ராஜ்கொட் சார்பாக சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரென்டன் மக்கலம், ஜேம்ஸ் ‡போக்னர், டுவைன் பிராவோ ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது வாங்கப்படாத வீரர்கள், அடுத்த ஏலத்தில், ஏனைய வீரர்களுடன் இணைந்து, ஏலத்துக்கு விடப்படுவர்.
இதில், டோணி, ரெய்னா ஆகியோர், ஐ.பி.எல்-இல் தமது 2ஆவது அணிக்காக விளையாடவுள்ள நிலையில், 8ஆவது பருவகாலமும் ஒரே அணிக்காக விளையாடவுள்ள வீரர்களாக, விராத் கோலியும் (பெங்களூர்) ஹர்பஜன் சிங்கும் (மும்பை) மாத்திரமே காணப்படுகின்றனர்.
இந்தத் தெரிவில் முதலாவதாகத் தெரிவுசெய்யப்பட்ட வீரருக்காக 1.86 மில்லியன் அமெரிக்க டொலர்களும், அடுத்த வீரருக்கு 1.42 மில்லியன் டொலர்களும், மூன்றாமவருக்கு 1.12 மில்லியன் டொலர்களும், நான்காமவருக்கு 0.82 மில்லியன் டொலர்களும், ஐந்தாமவருக்கு 0.60 மில்லியன் டொலர்களும், அணிகளின் ஊதியப் பையிலிருந்து கழிக்கப்படும். ஆனால், இதற்கு முன்னர் இவ்வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமே, தொடர்ந்தும் வழங்கப்படும்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago