2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

டேவிஸ் கிண்ண டென்னிஸ்: சம்பியனானது பிரித்தானியா

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 30 , மு.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேவிஸ் கிண்ண டென்னிஸ் சுற்றுத் தொடரில் சம்பியன்களாக, பெரிய பிரித்தானிய அணி தெரிவாகியுள்ளது. முக்கியமிக்க இறுதிப் போட்டியில், பெல்ஜியத்தின் டேவிட் கொபினை, அன்டி மரே தோற்கடித்து, பெரிய பிரித்தானியாவுக்கான சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

மிகவும் கடுமையானதாக போட்டியாக அமைந்த இப்போட்டியில், 6-3, 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்ற மரே, பெரிய பிரித்தானியாவுக்கான சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார். நேர் செட் வெற்றியாக அமைந்த போதிலும், மிகவும் போராட வேண்டிய நிலை காணப்பட்டது.

இந்த வெற்றியுடன், 5 சுற்றுக்களைக் கொண்ட இறுதிச் சுற்றில், பெரிய பிரித்தானிய அணிக்கு 3-1 என்ற முன்னிலையை வழங்கியே, அந்நாட்டுக்கான சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இப்பட்டத்தை பெரிய பிரித்தானியா வெற்றிகொள்ளும் 10ஆவது தடவை இதுவாகும். எனினும், 1936ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்நாடு, இப்பட்டத்தை வெல்லும் முதற்தடவை இதுவாகும்.

அண்மைய வருடங்களில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை வெளிப்படுத்திவரும் மரே, தற்போது, விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ், ஒலிம்பிக் பதக்கம் ஆகியவற்றோடு, டேவிட் கிண்ண பதக்கத்தையும் வென்றவராக மாறியுள்ளார்.

வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த அன்டி மரே, 'நாம் வெற்றிபெற்றோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனது சிறப்பான டென்னிஸ் ஆட்டத்தை நான், எனது நாட்டுக்காக விளையாடும் போது வெளிப்படுத்துகிறேன்" என்றார்.
அத்தோடு, இந்த வெற்றியை, தனக்கு மிகவும் உணர்வுபூர்வமான வெற்றியெனக் குறிப்பிட்ட மரே, இந்த வெற்றியைப் பெறுவது சாத்தியமென எண்ணியிருக்கவில்லையெனவும், இதைத் தமது வென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .