Editorial / 2026 மார்ச் 24 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை ஜூனியர் சாம்பியன்ஷிப் (Davis Cup Junior Championship) தொடரில் பங்கேற்றுள்ள சவூதி அரேபிய டென்னிஸ் அணியினரை, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் மேதகு காலித் ஹமூத் நாசர் அல்-தஸாம் அல்-கஹ்தானி இன்று (24) நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்று வரும் இந்த சர்வதேசத் தொடரில் சவூதி டென்னிஸ் சம்மேளனத்தின் சார்பில் இளம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது சவூதி வீரர்களுடன் கலந்துரையாடிய தூதுவர், அவர்கள் சர்வதேச ரீதியிலான போட்டிகளில் சிறந்து விளங்கத் தனது முழுமையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவதாகத் தெரிவித்தார். இளம் வீரர்களின் திறமைகளைப் பாராட்டிய அவர், சவூதி அரேபியாவின் விளையாட்டுத்துறையை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமைக்குரியது எனவும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பு கொழும்பில் போட்டி நடைபெறும் மைதான வளாகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அபு அலா
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago