2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது நாளை

Editorial   / 2017 நவம்பர் 30 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குகிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் நான்காமிடத்தில் நியூசிலாந்து இருப்பதுடன், எட்டாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்ற நிலையில் இத்தொடரின் முடிவு தரவரிசையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தாது என்றபோதும் 1995ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு பிறகு நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்லாத மேற்கிந்தியத் தீவுகள், 22 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற எதிர்பார்க்கிறது.

மறுபக்கம் உபாதை காரணமாக, டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்தின் வழமையான விக்கெட் காப்பாளர் பி.ஜெ வட்லிங் குறித்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என்பதோடு, தனது முதலாவது குழந்தை பிறப்பதை எதிர்பார்த்துள்ள சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதியும் இந்தப் போட்டியில் பங்கேற்கமாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .