2025 மே 09, வெள்ளிக்கிழமை

டெஸ்ட்களிலிருந்து ஓய்வு பெற்ற றோஹித்

Shanmugan Murugavel   / 2025 மே 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மா ஓய்வு பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தலைவர் பதவியிலிருந்து 38 வயதான றோஹித் நீக்கப்படுவாரென்ற தகவல்களுக்கு மத்தியிலேயே அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவ்வாறெனினும் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் றோஹித் விளையாடவுள்ளார்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து 2024ஆம் ஆண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து றோஹித் ஓய்வு பெற்றிருந்தார்.

இதுவரையில் 67 டெஸ்ட்களில் விளையாடி 40.57 என்ற சராசரியில் 4,301 ஓட்டங்களை றோஹித் பெற்றிருந்தார். றோஹித்தின் கீழ் 12 போட்டிகளில் வென்ற இந்தியா, மூன்றை வெற்றி தோல்வியின்றி முடித்திருந்தது.

அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ், நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடர்களின்போது றோஹித் பிரகாசித்திருக்கவில்லை என்பதோடு இந்தியாவும் தோல்வியைத் தளுவியது.

இந்நிலையில் அவுஸ்திரேலியத் தொடரின்போது றோஹித் இல்லாத சமயத்தில் ஜஸ்பிரிட் பும்ராவே அணித்தலைவராகக் கடமையாற்றியபோதும் அவரது பந்துவீச்சு சுமை காரணமாக ஷுப்மன் கில்லே அணித்தலைவராக நியமிக்கப்படுவாரெனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X