Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டுடனான குழு எஃப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது.
இன்டர் மிலன் சார்பாக, லோட்டரோ மார்ட்டின்ஸ், அன்டோனியோ கன்ட்ரெவா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் மிச்சி பச்சுவாய் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குழு ஜி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனை போர்த்துக்கல் கழகமான பெய்பிக்கா வென்றது. பெய்பிக்கா சார்பாக, றஃபா சில்வா, பிஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லயோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெம்பிஸ் டிபே பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவுடனான குழு எச் போட்டியொன்றை 1-1 என்ற கோல் கண்க்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லி சமப்படுத்தியிருந்தது. வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை டெனிஸ் செர்ஷெவ் பெற்றிருந்தார். லில்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை நனிடாமோ இகோனே பெற்றிருந்தார்.
இந்நிலையில், செக் குடியரசுக் கழகமான ஸ்லாவியா பிராஹாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி ஒரு கோலைப் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. ஸ்லாவியா பிராஹா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜான் பொறில் பெற்றிருந்தார்.
இதேவேளை, ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்கின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொன்றில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி வென்றிருந்தது. நாப்போலி சார்பாக, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் இரண்டு கோல்களையும், லொரென்ஸோ இன்சீனியா ஒரு கோலையும் பெற்றனர். றெட் புல் சல்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எர்லிங் பிரோட் ஹலான்ட் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ரஷ்யக் கழகமான செய்ன்ட் பீற்றர்ஸ்பேர்க்குடனான குழு ஜி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக் வென்றிருந்தது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, கொனார்ட் லைமர், மார்செல் சபிட்ஸியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செய்ன்ட் பீற்றர்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை யரோஸ்லவ் றகிட்ஸ்கி பெற்றிருந்தார்.
இதேவேளை, பெல்ஜியக் கழகமான ஜெங்க்கின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொன்றில் 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, அலெக்ஸ் ஒக்ஸ்லெட்-சம்பர்லின் இரண்டு கோல்களையும், சாடியோ மனே மற்று மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜெங்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஸ்டீபன் ஒடே பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago