Editorial / 2019 ஜூலை 18 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரிலிருந்து அக்கழகத்தின் பின்களவீரரான கெய்ரான் ட்ரிப்பியர் தம்முடன் இணைந்து கொண்டுள்ளதாக ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் நேற்று தெரிவித்துள்ளது.
மூன்றாண்டு ஒப்பந்தமொன்றுக்கு ட்ரிப்பியர் இணங்கியுள்ளதாக தமது இணையத்தளத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் கூறியுள்ளது.
இந்நிலையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்கு 22 மில்லியன் யூரோக்களை அத்லெட்டிகோ மட்ரிட் செலுத்தியதாக ஸ்பானிய, பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான பேண்லியிலுருந்து 2015ஆம் ஆண்டு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரில் இணைந்து கொண்ட ட்ரிப்பியர், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்காக 114 போட்டிகளில் விளையாடியிருந்தார்.
அந்தவகையில், ட்ரிப்பியரைக் கைச்சாத்திட்டமை மூலம் தமது பின்களத்தை மாற்றுவதை அத்லெட்டிகோ மட்ரிட் தொடருகின்றது. அத்லெட்டிகோ மட்ரிட்டின் பின்களவீரர்களான டியகோ கொடின், பிலிப் லூயிஸ், லூகாஸ் ஹெர்ணான்டஸ் ஆகியோர் அக்கழகத்தை விட்டு விலகிய நிலையில் ட்ரிப்பியர் தவிர றெனன் லொடி, பிலிப் ஆகிய பின்களவீரர்களை அத்லெட்டிகோ மட்ரிட் கைச்சாத்திட்டுள்ளது.
2 hours ago
9 hours ago
9 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
07 Apr 2026