2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணம்: மூன்றாமிடத்தைப் பெற்ற நைஜீரியா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 18 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரோக்கோவில் நடைபெற்று வந்த தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில் நைஜீரியா மூன்றாமிடத்தைப் பெற்றது.

சனிக்கிழமை (17) நடைபெற்ற எகிப்துடனான மூன்றாமிடத்துக்கான போட்டியில் பெனால்டியில் வென்றே நைஜீரியா மூன்றாமிடத்தைப் பெற்றது.

இப்போட்டியின் வழமையான நேரத்திலும், மேலதிக நேர முடிவிலும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் பெனால்டியில் எகிப்தின் மொஹமட் சாலா, ஓமர் மர்மூஷுன் பெனால்டிகளை நைஜீரியாவின் கோல் காப்பாளர் ஸ்டான்லி நுவபாலி தடுத்த நிலையில் றபி றபியா, மஹ்மூட் சபெர் தமதுதைகளை உட்செலுத்தியிருந்தனர். நைஜீரியாவின் பிஸயோ டெலே-பஷிருவின் உதையை எகிப்தின் கோல் காப்பாளர் மொஸ்டஃபா ஷொபெய்ர் தடுத்தபோதும் அகொர் அடம்ஸ், மோஸஸ் சிமோன், அலெக்ஸ் இவோபி, அடெமோலா லுக்மன் ஆகியோர் தமதுதைகளை கோ கம்பத்துக்குள் செலுத்திய நிலையில் 4-2 என்ற ரீதியில் நைஜீரியா வென்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X