2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தனஞ்சய சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசலாம்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 08 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய பந்துவீசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தனது பந்துவீச்சுப் பாணியை தனஞ்சய திருத்தியமைத் தொடர்ந்தே அனுமதிக்கப்பட்ட அளவிலேயே தற்போது அவரது முழங்கை மடிப்பு இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் நிபுணர் குழு அனுமதியளித்ததைத் தொடர்ந்தே தனஞ்சய சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியானது ஓராண்டுக்குள் இரண்டு தடவை விதிகளுக்கு புறம்பானது எனக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 12 மாத இடைநிறுத்தமொன்றை சர்வதேச கிரிக்கெட்டில் தனஞ்சய எதிர்கொண்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .