2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 30 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்றிருந்த நிலையில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

மே. தீவுகள்: 220/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொமாறியோ ஷெப்பர்ட் ஆ.இ 44 (22), நிக்கலஸ் பூரான் 41 (19), பிரண்டன் கிங் 36 (25), றேமன் றீஃபயர் 27 (18), கைல் மேயர்ஸ் 17 (10), அல்ஸாரி ஜோசப் ஆ.இ 14 (09), ஜேஸன் ஹோல்டர் 13 (09), றொவ்மன் பவல் 11 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்கியா 2/36 [4])

தென்னாபிரிக்கா: 213/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றீஸா ஹென்ட்றிக்ஸ் 83 (44), றீலி றொஸோ 42 (21), ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 35 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி ஜோசப் 5/40 [4])

போட்டியின் நாயகன்: அல்ஸாரி ஜோசப்

தொடரின் நாயகன்: ஜோன்ஸன் சார்ள்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X