2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேறிய ஷ்ரேயாஸ்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலையானது தொடர்ந்தும் இக்கட்டாக உள்ளபோதும் உறுதியானதாகக் காணப்படுகின்றது. ஐயரை நெருக்கமாக அவதானிக்க அணி மருத்துவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நியமித்துள்ள நிலையில் ஐயர் தேறிவருவதாக நம்பப்படுகிறது.

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஐயர் வெளியேறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ளும்போது சனிக்கிழமை (25) காயமடைந்த ஐயருக்கு மண்ணீரவில் கிழிவு ஏற்பட்டதாக ஸ்கான்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ஐயர் ஆபத்தை தாண்டியுள்ளபோதும் பிடியெடுக்கும்போது மைதானத்தில் வீழ்ந்ததில் உடலினுள்ளே இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X