Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, செஞ்சூரியனில் இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டியில் தோற்று, 0-1 என இத்தொடரில் பின்தங்கியுள்ள இலங்கை, வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டுமானால் சகல துறைகளிலும் மேம்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக, துடுப்பாட்டத்தில் அதிக முன்னேற்றத்தை இலங்கை காண்பிக்க வேண்டியுள்ளது. அந்தவகையில், ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களிடமிருந்து மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. சிரேஷ்ட வீரராக இருக்கின்ற உபுல் தரங்க, முன்னைய காலங்களைப் போலவே மோசமாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது போட்டியில் ஆட்டமிழந்தார். அணிக்கு வெளியே அவிஷ்க பெர்ணான்டோ போன்ற அண்மையில் பிரகாசித்த அதிரடியான துடுப்பாட்டவீரர்கள் இருக்கையில், இப்போட்டியிலும் தரங்கவின் மோசமான துடுப்பாட்டம் தொடர்ந்தால், அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டால் ஆச்சரியமில்லை.
இதேவேளை, மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரரான நிரோஷன் டிக்வெல்லவும் பொறுப்பாகத் துடுப்பெடுத்தாட வேண்டியுள்ளது. இது தவிர, முதலாவது போட்டியின் பிற்பாடு அணித்தலைவர் லசித் மலிங்க தெரிவித்தது போன்று, குசல் மென்டிஸ் போன்றதொரு வீரர், நிலைமையை ஆராய்ந்து முடிவு வரை களத்தில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில், விஷ்வ பெர்ணான்டோ ஆரம்பத்திலேயே கடந்த போட்டியில் விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தாலும் ஓட்டங்களை வழங்கியிருந்தார். அவர் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரையில், அகில தனஞ்சயவுக்கு மேலதிகமாக இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக தனஞ்சய டி சில்வா செயற்படலாம் என்பதால், கடந்த போட்டியில் விளையாடிய லக்ஷன் சந்தகானுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித இன்றைய போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக, குறிப்பிடக்கூடிய வகையில் தென்னாபிரிக்க அணியில் முதலாவது போட்டியில் குறைபாடுகள் இல்லாத நிலையில், முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே இன்றைய போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹஷிம் அம்லா, ஜெ.பி டுமினி போன்ற சிரேஷ்ட வீரர்கள் குழாமுக்கு வெளியே இருக்கின்ற நிலையில், றீஸா ஹென்ட்றிக்ஸ் ஓட்டங்களைப் பெற வேண்டி இருக்கிறார்.
இதேவேளை, டெஸ்ட் தொடரிலும் விளையாடியமை காரணமாக ககிஸோ றபடாவுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு, டேல் ஸ்டெய்ன் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
51 minute ago
2 hours ago