2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிராக தடுமாறுகிறது சிம்பாப்வே

Editorial   / 2017 டிசெம்பர் 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்கா, சிம்பாப்வே அணிகளுக்கிடையே போர்ட் எலிஸபெத்தில் நேற்று ஆரம்பித்த வரலாற்றின் முதலாவது நான்கு நாள் பகல் – இரவு டெஸ்ட் போட்டியின் நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில் சிம்பாப்வே அணி தடுமாறி வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்கா, தமது முதலாவது இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், ஏய்டன் மர்க்ரம் 125, ஏ.பி. டி வில்லியர்ஸ் 53, தெம்பா பவுமா 44. டீன் எல்கர் 31, குயின்டன் டி கொக் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கைல் ஜார்விஸ், கிறிஸ் மெபு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அணித்தலைவர் கிறேமி கிறீமர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய சிம்பாப்வே, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், றயான் பேர்ள் 15, கைல் ஜார்விஸ் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழகாமலுள்ளனர். பந்துவீச்சில், மோர்னி மோர்கல் 3, வேர்ணன் பிலாந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X