Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 05 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-2 என இலங்கை இழந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே தோற்றிருந்த இலங்கை, ஜொஹன்னஸ்பேர்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை 10 விக்கெட்டுகளால் தோற்றமையைத் தொடர்ந்தே தொடரை 0-2 என இலங்கை இழந்துள்ளது.
இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் டீன் எல்கர் தெரிவாகியிருந்தார்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 157/10 (துடுப்பாட்டம்: குஷல் பெரேரா 60, வனிடு ஹஸரங்க 29, டுஷ்மந்த சமீர 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 6/56, வியான் முல்டர் 3/25 லூதோ சிபம்லா 1/27)
தென்னாபிரிக்கா: 302/10 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 127, றஸி வான் டர் டுஸன் 67 ஓட்டங்கள். பந்துவீச்சு: விஷ்வ பெர்ணான்டோ 5/101, தசுன் ஷானக 2/42, அசித பெர்ணான்டோ 2/61, டுஷ்மந்த சமீர 1/53)
இலங்கை: 211/10 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 103, நிரோஷன் டிக்வெல்ல 36, லஹிரு திரிமான்ன 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 4/44, லூதோ சிபம்லா 3/40, அன்றிச் நொர்ட்ஜே 2/64, வியான் முல்டர் 1/52)
தென்னாபிரிக்கா: 67/0 (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் ஆ.இ 36, டீன் எல்கர் ஆ.இ 31 ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: டீன் எல்கர்
தொடரின் நாயகன்: டீன் எல்கர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago