2025 ஜூலை 05, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவை வெள்ளையடித்தது இந்தியா

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், தென்னாபிரிக்காவை இந்தியா வெள்ளையடித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்று இத்தொடரை ஏற்கெனவே கைப்பற்றியிருந்த இந்தியா, ராஞ்சியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என தென்னாபிரிக்காவை வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 497/9 (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 212, அஜின்கியா ரஹானே 115, இரவீந்திர ஜடேஜா 51, உமேஷ் யாதவ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டே 4/133, ககிஸோ றபாடா 3/85, அன்றிச் நொர்ட்ஜே 1/79)

தென்னாபிரிக்கா: 162/10 (துடுப்பாட்டம்: ஸுபைர் ஹம்ஸா 62, ஜோர்ஜ் லின்டே 37, தெம்பா பவுமா 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 3/40, இரவீந்திர ஜடேஜா 2/19, ஷபாஷ் நதீம் 2/22, மொஹமட் ஷமி 2/22)

தென்னாபிரிக்கா: 133/10 (துடுப்பாட்டம்: தெனியுஸ் டி ப்ரூன் 30, ஜோர்ஜ் லின்டி 27, டேன் பீடிட் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/10, ஷபாஷ் நதீம் 2/18, உமேஷ் யாதவ் 2/35, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/28, இரவீந்திர ஜடேஜா 1/36)

போட்டியின் நாயகன்: ரோஹித் ஷர்மா

தொடரின் நாயகன்: ரோஹித் ஷர்மா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .