Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் குழாம்களில் தொடர்ச்சியாகத் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள துடுப்பாட்ட வீரர் பவட் அலாம், இருந்தபோதும் உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களைத் தொடர்ந்து பெற முயலுவதாகவும் உடற்றகுதியுடனிருக்க முயல்வதாகவும் கூறியுள்ளார்.
கடந்த நான்காண்டுகளாக, பாகிஸ்தான் முதற்தரப் போட்டித் தொடரான குவைட்-இ-அஸாம் கிண்ணத் தொடரில் 40.71, 55.54, 56, 71.90 என்ற ஓட்ட சராசரியை பவட் அலாம் கொண்டிருக்கின்றபோதும் பல்வேறுபட்ட தேர்வுக் குழுக்கள், அணித்தலைவர்களால் கடந்த எட்டாண்டுகளாக பவட் அலாம் அணியில் தேர்வு செய்ப்படவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் 2009ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட பவட் அலாம், தனது முதலாவது போட்டியிலேயே 168 ஓட்டங்களைப் பெற்றபோதும், குறித்த போட்டிக்கு அடுத்த இலங்கைக்கெதிரான போட்டியிலும் அவ்வாண்டு இறுதியில் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிருக்கவில்லை. பின்னர் 2015ஆம் ஆண்டு வரை 38 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 24 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் பவட் அலாம் விளையாடியிருந்தார்.
இந்நிலையில், அயர்லாந்து, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட்களுக்கான பாகிஸ்தானின் ஆரம்ப 25 பேர் கொண்ட குழாமில் பவட் அலாம் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் இறுதிக் குழாமில் தேர்வுசெய்யப்படவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தெரிவுக் குழுவின் தலைவர் இன்ஸமாம் உல் ஹக், கடந்த மூன்றாண்டுகளில் பவட் அலாமை விட சிறந்த வீரர்களை தான் பார்த்ததாகக் கூறியதுடன், தனக்கு முன்னர் அவர் ஏன் தெரிவுசெய்யப்படவில்லை என தனக்குத் தெரியாதென்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பவட் அலாமை விட மோசமான சராசரியைக் கொண்ட இன்ஸமாம் உல் ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக்ம், அயர்லாந்து, இங்கிலாந்துக்கெதிரான பாகிஸ்தானின் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், இமாம் உல் ஹக்கை தெரிவு செய்யும் முடிவை தான் எடுக்கவில்லையெனக் கூறியுள்ளார்.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago