Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மெல்பேணில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது.
முதல் மூன்று போட்டிகளிலும் தோற்று ஆஷஸை அவுஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ள இங்கிலாந்து இப்போட்டியிலாவது வென்று இழந்த மரியாதையை ஓரளவாவது மீட்க எதிர்பார்த்துள்ள நிலையில், மறுபக்கம் 5-0 என இங்கிலாந்தை வெள்ளையடிப்பதை இலக்காகக் கொண்ட அவுஸ்திரேலியா இப்போட்டியிலும் தமது ஆதிக்கத்தை தொடர எதிர்பார்க்கின்றது.
மெல்பேண் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படையில், இறுதி மூன்று நாள் ஆட்டங்களின்போதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
காயம் காரணமாக, இத்தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிற்செல் ஸ்டார்க்கை அவுஸ்திரேலியா இழந்துள்ளமை அவ்வணிக்கு பின்னடைவென்றபோதும் மிற்செல் ஸ்டார்க்கை ஜக்ஸன் பேர்ட் பிரதியீடு செய்யவுள்ள நிலையில் இது மிகப்பெரியதொரு பின்னடைவாக இருக்கப் போவதில்லை. ஏனெனில், தொடர்ச்சியாக உள்ளூர்ப் போட்டிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி வருமொருவரே ஜக்ஸன் பேர்ட் ஆவார்.
மறுப்பக்கம், தொடரை இங்கிலாந்து இழந்தாலும் அவ்வணியின் பிரகாசமான புள்ளியொன்றாக இருந்த கிரேய்க் ஒவெர்ட்டனை இழந்துள்ளமை இங்கிலாந்த்துக்கு பாதிப்பாகவே நோக்கப்படுகிறது. எனினும் இங்கிலாந்தின் பயிற்சிப் போட்டியில் ஏனையவர்களை விட சிறப்பாகச் செயற்பட்ட சாம் குரான் கிரேய்க் ஒவெர்ட்டனை பிரதியீடு செய்வது நம்பிக்கையளிப்பதாகவுள்ளது.
இந்நிலையில், இரண்டு அணிகளும் தமது விளையாடும் பதொனொருவரை ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், இத்தொடரில் சோபிக்காத ஸ்டூவர்ட் ப்ரோட்டுக்கான இறுதி வாய்ப்புகளொன்றாக இப்போட்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி: கமரோன் பன்குரோப்ட், டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), ஷோர்ன் மார்ஷ், மிற்செல் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட்.
இங்கிலாந்து அணி: அலிஸ்டயர் குக், மார்க் ஸ்டோன்மன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ றூட் (அணித்தலைவர்), டேவிட் மலன், ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டொம் குரான், ஸ்டுவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்.
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago