Shanmugan Murugavel / 2021 ஜூன் 21 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் விலகல் முறையிலான சுற்றுக்கு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது.
இத்தாலியில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் தோற்றிருந்தது. இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை மட்டியோ பெஸ்ஸினா பெற்றிருந்தார்.
இந்நிலையில், இப்போட்டியில் தோற்றிருந்தபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் குழு ஏயில் இரண்டாமிடம் பெற்ற நிலையில், விலகல் முறையிலான சுற்றுக்கு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது.
இதேவேளை, அஸார்பைஜானில் நடைபெற்ற துருக்கியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்து வென்றது. சுவிற்ஸர்லாந்து சார்பாக, ஸ்கொட்ரான் ஷகி இரண்டு கோல்களையும், ஹரிஸ் ஸெஃபெரோவிச் ஒரு கோலையும் பெற்றனர். துருக்கி சார்பாகப் பெறப்பட்ட கோலை இர்ஃபான் கஹ்வெசி பெற்றிருந்தார்.
அந்தவகையில், குழுவில் இறுதியிடம் பெற்ற துருக்கி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .