Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதியாக இடம்பெற்ற லா லிகா பருவாகாலத்தில் 48 கோல்களைப் பெற்று, ஐரோப்பாவில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற ரீதியில் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான ரியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்ட்டியானோ சாதனை ரீதியாக நான்காவது தடவையாக தங்கப்பாதணி வீரர் விருதை வென்றுள்ளார்.
போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தலைவரான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ, 2014-15 பருவகாலத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து 61 கோல்களைப் பெற்றுள்ளார். எனினும் ரியல்மட்ரிட் அணி சம்பியன்ஸ் லீக், லா லிகா, கிங்ஸ் கிண்ணம் என மூன்றையும் இழந்தவேளை, மூன்று கிண்ணங்களையும் பரமவைரிகளான பார்சிலோனா அணியே கைப்பற்றியிருந்தது.
நான் ஒருபோதும் நான்கு தரம் வெல்ல திட்டமிடவில்லை என பரிசளிப்பு விழாவில் தெரிவித்துள்ள ரொனால்டோ, ஒன்று அல்லது இரண்டை வெல்ல திட்டமிட்டதாகவும் ஆனால் ஒருபோதும் நான்குக்கு திட்டமிடவில்லை எனத் தெரிவித்த ரொனால்டோ, நான் ஒருவரே நான்கு தங்கப்பாதணிகளைக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், எனினும் தனக்கு இன்னும் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
53 minute ago