Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட குழாமில், பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் டிம் சௌத்தி, மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குழாமுக்கு திரும்பவுள்ளார். இவருக்குப் பதிலாக முதலிரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இன்னுமோர் வேகப்பந்துவீச்சாளரான மற் ஹென்றி பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், முதற்தடவையாக துடுப்பாட்ட வீரர் ஹென்றி நிக்கொல்ஸ் இடம்பெற்றுள்ளார். 2014-15 பருவகாலத்திற்கான போர்ட் கிண்ணத்தில் 75.66 என்ற சராசரியில் 454 ஓட்டங்களைக் குவித்து, இத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களில் இரண்டாமிடத்தைப் பெற்றார்.
இந்நிலையில், தற்போதும் காயத்திலிருந்து குணமடைந்து வரும் சகலதுறை வீரர்களான கொரி அண்டர்சன், ஜேம்ஸ் நீஷம், கிராண்ட் எலியட் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை. எனினும் முதுகுப்பகுதியில் உள்ள பிரச்சினை காரணமாக, அண்மையில் இடம்பெற்ற நியூசிலாந்து உள்ளூர் இருபது-20 போட்டிகளில் துடுப்பாட்ட வீரராக மட்டும் பங்கேற்ற கொரி அண்டர்சன், இருபது-20 போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர எலியட், இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்தப் பருவகால முடிவில் சர்வதேசப் போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நதன் மக்கெலம் குழாமில் இடம்பெறவில்லை. சுழற்பந்துவீச்சாளராக இஷ் சோதி இடம்பெற்றுள்ளார்.
குழாம்-பிரெண்டன் மக்கலம் (தலைவர்), டவ் பிரேஸ்வெல், மார்ட்டின் கப்தில், மிட்செல் மக்கெலெனகான், அடம் மிலின், ஹென்றி நிக்கொல்ஸ், லுக் ரோங்கி, மிட்செல் சந்தர், இஷ் சோதி, ரொஸ் டெய்லர், கேன் வில்லியம்ஸன், ஜோர்ஜ் வேக்கர், மற் ஹென்றி (முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டும்), டிம் சௌதி (மூன்றாவது போட்டிக்கு மட்டும்)
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago