Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2023 ஜூலை 12 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை இலங்கைப் பெண்கள் அணி வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்திருந்த இலங்கை, கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் அணித்தலைவி சாமரி அத்தப்பத்து வெல்ல, நியூசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, அணித்தலைவி சோபி டெவினின் 46 (25), சுஸி பேட்ஸின் 37 (38) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், இனோகா ரணவீர 4-0-15-3, சுகந்திகா குமாரி 4-0-23-2, காவ்யா கவிந்தி 4-0-27-1 என்ற பெறுபேறுகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 141 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அத்தப்பத்தின் ஆட்டமிழக்காத 80 (47), ஹர்ஷிதா சமரவிக்கிரமவின் ஆட்டமிழக்காத 49 (40) ஓட்டங்களோடு 14.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகியாக அத்தப்பத்தும், தொடரின் நாயகியாக பேட்ஸும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago