Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான நெய்மரை ஒப்பந்தம் செய்வதற்கான, ஸ்பானிய லா லிகா கழகங்களான றியல் மட்ரிட், பார்சிலோனாவின் கோரிக்கைகளை பரிஸ் ஸா ஜெர்மைன் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது மத்தியகளவீரர் ஜேம்ஸ் றொட்றிகாஸ், முன்களவீரர் கரெத் பேல், கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் மற்றும் 100 மில்லியன் யூரோக்களுக்குப் பதிலாக பிரேஸில் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்களவீரரான நெய்மரைக் கைச்சாத்திடும் றியல் மட்ரிட்டின் கோரிக்கையை பரிஸ் ஸா ஜெர்மைன் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, 27 வயதான நெய்மரைக் கைச்சாத்திடுவதற்காக அவரது முன்னாள் கழகமான பார்சிலோனா முன்வைத்த 190 மில்லியன் யூரோக்கள் கடன் ஒப்பந்தத்தை பரிஸ் ஸா ஜெர்மைன் நிராகரித்த மறுநாளான நேற்றே மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
கடனடிப்படையில் இப்பருவகாலத்தில் நெய்மரை ஒப்பந்தம் செய்வதற்கு 40 மில்லியன் யூரோக்களை பார்சிலோனா முதலில் வழங்குவதாகும் பின்னர் எதிர்வரும் பருவகாலத்தில் நெய்மரை நிரந்தரமாக ஒப்பந்தம் செய்வதற்கு 150 மில்லியன் யூரோக்களை வழங்குவதாகவும் மேற்கூறப்பட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெய்மரைக் கைச்சாத்திடுவதற்கான பார்சிலோனாவின் கோரிக்கை பரிஸ் ஸா ஜெர்மைனால் நிராகரிக்கப்பட்டதாகவும், ஆனால் அது இரண்டாண்டு கால கடனடிப்படையில் ஒப்பந்தம் செய்வதென்றும், ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் அதனை நிரந்தரமாக்குவதற்கான தெரிவைக் கொண்டதுமான 170 மில்லியன் யூரோக்கள் ஒப்பந்தமே முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸும் நெய்மரைக் கைச்சாத்திடுவதில் ஆர்வமாயுள்ளதாகக் கூறப்படுவதுடன், தமது முன்களவீரரான போலோ டிபாலாவை நெய்மரைக் கைச்சாத்திடும் ஒப்பந்தத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு வழங்கத் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
5 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago