Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நீஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் லயோன் வென்றது.
லயோன் சார்பாக, மெம்பிஸ் டிபே, டினோ கட்வெரே, கார்ள் டொகோ எகம்பி, ஹுசெம் ஆவோர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நீஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அமினே கெளரி பெற்றிருந்தார்.
இந்நிலையில், மர்ஸெய்யின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், றெய்ம்ஸுக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மர்ஸெய் சார்பாகப் பெறப்பட்ட கோலை புளோரியன் தயுவின் பெற்றதோடு, றெய்ம்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago