Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 26 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து குரான் பிறீயில் பிரித்தானியாவின் லான்டோ நொரிஸ் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்தபோதும் நடப்புச் சம்பியனான நெதர்லாந்தின் மக்ஸ் வெர்ஸ்டப்பனால் முந்தப்பட்டபோதும் மீண்டும் 18ஆவது சுற்றில் அவரை மீண்டும் முந்தியே மக்லரென் அணியின் நொரிஸ் வென்றார்.
றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தைப் பெற, பந்தயத்தை ஆறாமிடத்திலிருந்து ஆரம்பித்த மொனாக்கோவின் சார்ள் லெக்கலெர்க், மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 295 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் வெர்ஸ்டப்பன் உள்ளார். இரண்டாமிடத்தில் 225 புள்ளிகளுடன் நொரிஸும், 192 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பெராரி அணியின் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.
2 hours ago
8 hours ago
9 hours ago
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago
07 Feb 2026