Shanmugan Murugavel / 2016 ஜனவரி 17 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
ஹமில்டனில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 56 (27), ஷொய்ப் மலிக் 39 (30) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மிற்சல் மக்லநகன், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 17.4 ஓவர்களின் நிறைவில் விக்கெட் எதனையும் இழக்காது, வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகர்களாக, மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸன் இருவரும் தெரிவாகினர்.
இத்தொடரின் முதற்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .