Administrator / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் பொதுச் சபையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தப் போட்டிகளை நடாத்துவதற்காக டேர்பனும் கனடாவின் எட்மன்டனும் போட்டியிட்ட போதிலும், இதற்கான போட்டியிலிருந்து இவ்வாண்டு பெப்ரவரியில் எட்மன்ட் விலகியதையடுத்து, டேர்பன் மாத்திரமே இதற்கான போட்டியில் காணப்பட்டிருந்தது.
1930ஆம் ஆண்டு முதன்முறையாக இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டிகள், 22ஆவது முறையாக 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்தாண்டு ஸ்கொட்லாந்தில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்ததோடு, அடுத்த தொடர் 2018ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .