2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பிறீமியர் லீக்: மன்செஸ்டர் சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றுள்ளதோடு, வெஸ்ட் புரோம், மிடில்ஸ்பேர்க் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

மன்செஸ்டர் சிற்றி, வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 3-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது.

ரஹீம் ஸ்டேர்லிங், சேர்ஜியோ அக்ரோ, நொலிட்டோ ஆகியோரை உள்ளடக்கிய தாக்குதல் ஆட்ட மும்மூர்த்திகளின் முயற்சியில் போட்டியின் ஏழாவது நிமிடத்தில் ஸ்டேர்லிங்கால் முதலாவது கோல் பெறப்பட்டதோடு, கெவின் டி புரூனேயின் “பிறீ கிக்”கை தலையால் முட்டி, பெர்ணான்டின்ஹோ, போட்டியின் 18ஆவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்றதோடு, போட்டியின் இறுதி நிமிடங்களில், தனது இரண்டாவது கோலினை ஸ்டேர்லிங் பெற்றிருந்தார்.

மேற்கூறப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், செல்சி, மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகளுடன் மன்செஸ்டர் சிற்றி ஒன்பது புள்ளிகளைப் பெற்று சமநிலையில் உள்ள போதும், கோல்கள் அடிப்படையில் சிற்றி முதலிடத்தில் உள்ளது.

வெஸ்ட் புரோம், மிட்டில்ஸ்பேர்க் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

சனிக்கிழமை (27) இடம்பெற்ற போட்டிகளில், பேர்ண்லியை செல்சியும் ஹள் சிற்றியை மன்செஸ்டர் யுனைட்டெட்டும் வட்ஃபோர்ட்டை ஆர்சனலும் சுவான்சீ சிற்றியை லெய்செஸ்டர் சிற்றியும் தோற்கடித்ததோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .