2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

புகை விடும் ரியான் பராக் - வீடியோவால் அதிர்ச்சி

Lenin Raj   / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ராஜஸ்தான் ரோயயல்ஸ் அணியின் தலைவர் ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் (Dressing Room) இ-சிகரெட் (E-cigarette) பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இ-சிகரெட் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடும் அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த அணியின் மேலாளர் விதிகளை மீறி டக் அவுட்டில் இருந்தபடி செல்போன் பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. 

நேரலையில் இந்த காட்சிகள் வெளியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலாளர் ரூமி பிந்தருக்கு அபராதம் விதித்த பிசிசிஐ கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .