Shanmugan Murugavel / 2021 மார்ச் 28 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஹமில்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் டிம் செளதி, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
நியூசிலாந்து சார்பாக துடுப்பாட்டவீரர் பின் அலென்னும், பங்களாதேஷ் சார்பாக வேகப்பந்துவீச்சாளர் ஷொரிஃபுல் இஸ்லாமும், சுழற்பந்துவீச்சாளர் நசும் அஹ்மட்டும் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து, ஆரம்பத்திலேயே நசும் அஹ்மட்டிடம் பின் அலென்னை இழந்தது. எனினும், மார்டின் கப்திலின் 35 (27), டெவோன் கொன்வேயின் ஆட்டமிழக்காத 92 (52), வில் யங்கின் 53 (30), கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத 24 (10) ஓடங்களோடு, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது. நசும் அஹ்மட், நான்கு ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்கு, 211 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பாக மொஹமட் நைம் 27 (18), அஃபிஃப் ஹொஸைன் 45 (33), மொஹமட் சைஃபுடீன் ஆட்டமிழக்காமல் 34 (34) ஓட்டங்களைப் பெற்றபோதும், இஷ் சோதி, லொக்கி பெர்கியூசன், டிம் செளதி, ஹமிஷ் பென்னிட்டிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களையே பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில், சோதி நான்கு ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4, லொக்கி பெர்கியூசன் நான்கு ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 2, ஹமிஷ் பென்னிற் நான்கு ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு ஒரு விகெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக கொன்வே தெரிவாகியிருந்தார்.
23 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago