Shanmugan Murugavel / 2015 நவம்பர் 11 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டுக்கான கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்துவதற்காக முயற்சிசெய்த இங்கிலாந்து, அதற்குச் செலவான பணத்தை, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்திடமிருந்து, திருப்பிப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடாத்தும் பொறுப்பு, ரஷ்யாவிடம் வழங்கப்பட்டது. எனினும், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, பரவலான குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள இங்கிலாந்தின் கால்பந்தாட்டச் சங்கத் தலைவரான கிரெக் டைக், குறித்த முயற்சிக்குச் செலவான 21 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களை மீட்பதற்கு, வழக்கறிஞரொருவரை பணிக்கமர்த்தியுள்ளதை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை ரஷ்யாவுக்கு வழங்குவதற்கான முடிவு, வாக்களிப்புக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்ததாக, இடைநிறுத்தப்பட்டுள்ள பீபா தலைவர் செப் பிளட்டர், அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அதன் பின்னரே இந்த நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
'இது, வாக்களிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரே, ரஷ்யாவுக்குச் சார்பாக அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளட்டர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே இந்த முடிவு காணப்படுகிறது" எனத் தெரிவித்த அவர், 'ஏராளமான மக்கள், அதற்குப் பணத்தினை இட்டிருந்தார்கள். எனவே, அது குறித்து வழக்கறிஞர்களிடம் கதைக்க முடிவுசெய்யப்பட்டது" என்றார்.
14 minute ago
25 minute ago
39 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
39 minute ago
55 minute ago