Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் நடுவர்களின் திறமை வெளிபாட்டு மற்றும் பயிற்சி முகாமையாளரான முன்னாள் நடுவர் சைமன் டௌபல், இம்மாதம் 31ஆம் திகதியிலிருந்து தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டௌபல் பதவி விலகுவதை உறுதிப்படுத்திய சர்வதேச கிரிக்கெட் சபை, 'சர்வதேச கிரிக்கெட் சபையின் நடுவர்களின் திறமை வெளிபாட்டு மற்றும் பயிற்சி முகாமையாளர் பதவியிலிருந்து சைமன் டௌபல் விலகுவதை ஐ.சி.சி உறுதிப்படுத்துகின்றது. எனினும், அமைப்பில் மற்றுமொரு மாற்றுப் பதவியில் டௌபலை பணிக்கமர்த்தும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அது குறித்தான அறிவிப்பு, விரைவில் வழங்கப்படும்" எனத் தெரிவித்தது.
குறிப்பிடத்தக்கதாக, இவ்வாண்டு நவம்பரில் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள சச்சின் - வோண் இருபதுக்கு-20 தொடரின் நடுவராக, சைமன் டௌபல் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டுவரை, சிறந்த நடுவருக்கான விருதைத் தொடர்ச்சியாக வெற்றிகொண்ட டௌபல், 2012ஆம் ஆண்டு நடுவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். அதனைத் தொடர்ந்தே, நடுவர்களுக்குப் பயிற்சி வழங்கும் பதவியை அவர் ஏற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .