Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 20 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் முடிவைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோணி நடுவர்களிடமிருந்து பந்தைப் பெற்றதையடுத்து அவர் ஓய்வுபெறப் போகின்றாரா என்ற தகவல்கள் வலம்வந்திருந்தன.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி ஷாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருணுக்கு பந்தை மகேந்திர சிங் டோணி காண்பிக்க விரும்பியதாகவும் நிலைமைகள் எவ்வாறிருந்தன என்ற பொதுவான யோசனையைப் பெறுவதற்கு எவ்வாறு பந்து மாற்றமடைந்ததது, அதன் தன்மையில் இருந்தது என பாரத் அருணுக்கு காண்பிக்க விரும்பியதாகக் கூறினார்.
இதேவேளை, மகேந்திர சிங் டோணி ஓய்வு பெறப் போகின்றார் எதிர்பார்ப்பு குப்பை எனத் தெரிவித்த ரவி ஷாஸ்திரி, மகேந்திர சிங் டோணி ஓரிடமும் செல்லவில்லை எனக் கூறினார்.
குறித்த தொடரின் இரண்டாவது போட்டியில், 59 பந்துகளில் 37 ஓட்டங்களையே மகேந்திர சிங் டோணி பெற்றிருந்த நிலையில், அரங்கத்திலிருந்த இரசிகர்களிடமிருந்து கூச்சல்களை எதிர்நோக்கியிருந்தார்.
இந்நிலையில், குறித்த போட்டியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி, மகேந்திர சிங் டோணிக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில், மகேந்திர சிங் டோணியின் வழியில் விமர்சனங்கள் அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த ரவி ஷாஸ்திரி, ஆனால் அந்த விமர்சனங்களால் குழாமுக்கு அவர் என்னத்தை வழங்குகின்றார் என்பதிலிருந்து, அவர் முக்கியமானவர் என்பதிலிருந்து சிறிது குறைவையும் ஏற்படுத்தி விடாது என்று கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago