Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை மூன்றாவது முறையாக வீழ்த்தி, தனது 9வது பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றி ஒருபுறம் இருக்க, போட்டிக்குப் பிந்தைய கோப்பை வழங்கும் விழாவில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா, இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகையை (Cheque) தூக்கி எறிந்த சம்பவம், பெரும் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதின. குரூப் சுற்று, சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதிப் போட்டி என மூன்று முறையிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இதில் இறுதிப் போட்டி மட்டுமே கடைசி ஓவர் பரபரப்பு வரை சென்றது. மற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இது தான் பாகிஸ்தான் கேப்டனின் விரக்திக்கு காரணமாக இருந்தது.
போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவின் முகத்தில் தோல்வியின் விரக்தி அப்பட்டமாகத் தெரிந்தது. இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள அவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பரிசுத் தொகையைப் பெற்றுக்கொண்ட சில நொடிகளிலேயே, தனது விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக, அந்தச் செக்கை அவர் அங்கேயே தூக்கி எறிந்தார்.
அவரது இந்தச் செயல், அங்கிருந்த அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பரிசளிப்பு விழாவில் தோல்வி குறித்துப் பேசிய அவர், "இதை ஜீரணிப்பது மிகவும் கடினம். பேட்டிங்கில் நாங்கள் சரியாக முடிக்கவில்லை. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம், ஆனால் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடித்திருந்தால், கதை வேறுவிதமாக இருந்திருக்கும்," என்றார்.ர்.
4 minute ago
12 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
17 minute ago
23 minute ago