Shanmugan Murugavel / 2024 ஜூலை 28 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில், சனிக்கிழமை (27) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அரியானே டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
கனடாவின் சம்மர் மக்கின்டொஷ் வெள்ளிப் பதக்கத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் கேட்டி லெடக்கி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
முதல் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் முதலாமிடத்தில் அவுஸ்திரேலியா உள்ளது. இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இரண்டாமிடத்தில் சீனாவும், ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் ஐக்கிய அமெரிக்காவும், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் நான்காமிடத்தில் பிரான்ஸ் உள்ளது. ஒரு தங்க, ஒரு வெள்ளிப், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் ஐந்தாமிடத்தில் தென்கொரியா உள்ளது.
34 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
4 hours ago