2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பற்றின்சனுக்கு மீண்டும் காயம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரின் எதிர்காலம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரின் பின் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான்களில் ஜேம்ஸ் பற்றின்சனின் முழங்காலுக்கும் காலுக்குமிடையிலான உபாதை மீண்டும் ஏற்பட்டுள்ளதை அடுத்தே ஜேம்ஸ் பற்றின்சனது எதிர்காலம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்சேர்ச்சில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து பற்றின்சனுக்கு உபாதை ஏற்பட்டதாகவும் கடந்த திங்கட்கிழமை (29) மெல்பேர்ணில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான்களில் அது தெரியவந்ததாகவும் அவுஸ்திரேலிய அணியின் உடற்றகுதி நிபுணர் டேவிட் பேக்லி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பற்றின்சனினது காயம் குணமடைய காலம் தேவைப்படுவதாகவும், இப்பருவகாலத்தின் மிகுதி உள்ளூர்ப் போட்டிகளில் பற்றின்சன் பங்கேற்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பருவகாலத்தின் ஆரம்பத்திலும் மேற்குறிப்பிட்ட அதே உபாதை காரணமாக, மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான தொடரையடுத்து பிக் பாஷ் லீக்கிலும் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளிலும் பற்றின்சன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .