2026 மார்ச் 16, திங்கட்கிழமை

பிறீமியர் லீக்: சமநிலையில் சிற்றி – வெஸ்ட் ஹாம் போட்டி

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 15 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.

சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை பெர்ணார்டோ சில்வா பெற்றதுடன், வெஸ்ட் ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை கொன்ஸ்டான்டினோஸ் மவ்ரோபனோஸ் பெற்றார்.

இதேவேளை செல்சியின் மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் வென்றது. நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை அந்தோனி கோடன் பெற்றிருந்தார்.

இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. சிற்றி 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் அஸ்தன் வில்லாவும் தலா 51 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் முறையே மூன்றாம் நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி அதிகமாகவும் ஆர்சனல் 2 போட்டிகள் அதிகமாகவும் விளையாடியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X