Shanmugan Murugavel / 2026 மே 04 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாக மதெயுஸ் குன்ஹா, பெஞ்சமின் ஸெஸ்கோ, கொபி மைனோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லிவர்பூல் சார்பாக டொமினிக் ஸபொஸ்லாய், கோடி கக்போ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 76 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 70 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் 64 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் உள்ளன. லிவர்பூலும் அஸ்தன் வில்லாவும் தலா 58 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன. இதில் ஏனைய அணிகளை விட சிற்றி இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடுள்ளது
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago