2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

பொலொக்னாவிடம் தோற்ற மிலன்

Shanmugan Murugavel   / 2025 மே 15 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டியில் பொலொக்னாவிடம் ஏ.சி மிலன் தோற்றது.

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இத்தொடரில் ஸ்டேடியோ ஒலிம்பிக்கோவில் வியாழக்கிழமை (15) அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கிலேயே பொலொக்னாவிடம் மிலன் தோற்றது.

பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை டான் என்டோயே பெற்றிருந்தார்.

அந்தவகையில் 51 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணமொன்றை பொலொக்னா வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X