Shanmugan Murugavel / 2015 நவம்பர் 15 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியுஸிலாந்து விளையாடி வருகிறது. இதில் பேர்த்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் 559 ஓட்டங்கள் என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கைக்கு பதிலளித்தாடி வரும் நியூசிலாந்து அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 510 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது. தற்போது களத்தில் ரொஸ் டெய்லர் 235 ஓட்டங்களுடனும், மார்க் கிரேய்க் 7 ஓட்டங்களுடன் உள்ளனர். முன்னதாக கேன் வில்லியம்ஸன் 166 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தார்.
இன்றைய ஆட்டத்தின் போது மூன்றாவது விக்கெட்டுக்காக ரொஸ் டெய்லரும் கேன் வில்லியம்ஸனும் இணைந்து 265 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். இதுவே, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி பெற்றுக் கொண்ட அதிகூடய இணைப்பாட்டமாகும். இதற்கு முன்னர், நாதன் அஸ்ட்டிலும் அடம் பரோரேயும் இணைந்து இதே பேர்த் மைதானத்திலேயே 8ஆவது விக்கெட்டுக்காக 253 ஓட்டங்களைப் பகிர்ந்ததே, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்திருந்தது.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும் ஜோஷ் ஹெஸில்வூட், மிட்செல் ஜோன்சன், மிட்செல் மார்ஷ், நதன் லயன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.
முன்னதாக டேவிட் வோணரரின் 253, உஸ்மான் க்வாஜாவின் 121 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 9 விக்கெட்டுக்களை இழந்து 559 ஓட்டங்களை தமது முதல் இனிங்ஸில் பெற்றுக்கொண்டபோது அவுஸ்திரேலிய அணி தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மார்க் கிரேய்க் 3 விக்கெட்டுக்களையும் ட்ரெண்ட் போல்ட், மட் ஹென்றி, டவ் பிரேஸ்வெல், ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago