Shanmugan Murugavel / 2016 ஜூலை 29 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்துப் பாவனை பற்றிய பல சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில், அணியின் வீரர்கள் பலரையும் இழந்துள்ள ரஷ்யாவின் றியோ ஒலிம்பிக்குக்கான அணி, புதன்கிழமை புறப்பட்டது. மொஸ்கோவிலிருந்தே இவ்வணி புறப்பட்டது.
அரச ஆதரவுபெற்ற ஊக்கமருந்துப் பாவனை, ரஷ்யாவில் இடம்பெறுவதாக ஆதாரங்களுடன் கூடிய அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்குபற்றுமா என்ற சந்தேகம் காணப்பட்டது. ஒட்டுமொத்த ரஷ்ய வீரர்களுமே தடைசெய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்திருந்தன.
எனினும், ஏற்கெனவே தடைக்குள்ளான தடகள வீரர்கள் தவிர ஏனைய வீரர்கள், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த நிலையில், சுமார் 70 பேரைக் கொண்ட ரஷ்ய அணியே, புதன்கிழமை புறப்பட்டது. வலைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், நீச்சல் அணி ஆகியன உள்ளடங்கிய வீரர்களே இவ்வாறு புறப்பட்டனர்.
இன்னும் பல வீரர்கள், அவர்களால் பங்குபற்ற முடியுமா, இல்லையா என்பது பற்றிய தெளிவில்லாமல், இறுதிநேர அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago